'தல' தோனியின் புது கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
முறுக்கு மீசையுடன் புதிய கெட்டப்பில் இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 4-ஆம் திகதியுடன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் அனைத்து அணி வீரர்களும் அடுத்த தொடர்களுக்காக சென்றுவிட்டனர்.
இந்திய வீரர்கள் இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களுக்காக சென்றுவிட்டாலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என ரசிகர்கள் குழம்பி வந்தனர்.
அவரது மனைவி சாக்ஷி தோனி போடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்து அவ்வப்போது தோனி வீட்டிலேயே தன் செல்லப்பிராணிகளுடன் பொழுதை கழித்து வருகிறார் என தெரிந்துக்கொண்டனர்.
Latest Snaps Of Mahi.... All the Way from Shimla..... ?❤️#MSDhoni • #Dhoni • @msdhoni pic.twitter.com/rjmrgXNPB2
— MS DHONI Zealot™ (@msdhonizealot) June 20, 2021
இந்நிலையில், கேப்டன் தோனி ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்லாவுக்கு தற்போது வருகை தருவதற்கு கோவிட் பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
'தல' தோனியை சிம்லாவில் கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தோனி முறுக்கு மீசையுடன் புதிய லுக்கில் இருப்பதால் அவரை அடையாளம் காண்பதிலும் ரசிகர்கள் குழம்புகின்றனர். அவரது புதிய கெட்டப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
Fresh pics of #MSDhoni from #Shimla
— Rits(Mask P?du Whistle Podu) (@Stanmahiraina) June 21, 2021
• @msdhoni | •#Dhoni pic.twitter.com/rqMOpccFUk
நடப்பு ஐபிஎல் சீசனில் தோனியின் பழைய அதிரடியை ரசிகர்கள் மிஸ் செய்தனர். ஆனால் அவரின் சிறப்பான கேப்டன்சியில் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்துள்ளது.
இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. வரும் செப்டம்பரில் தொடங்கவிருக்கும் ஐபிஎல்-ன் 2-ம் பகுதியில் தோனியின் பழைய ஃபார்மை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.