இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் CSK அணியில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தானா? கசிந்த பட்டியல்
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோத உள்ளன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் தற்போதைய நிலவரப்படி சிஎஸ்கே 2-வது இடத்திலும், மும்பை 4-வது இடத்திலும் உள்ளது.
இந்த முறை இந்தியாவில் நடந்த முதல் சுற்று ஐபிஎல் போட்டிகளில் நன்றாக ஆடிய டுபிளெசிஸ், ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆகியோர் சில போட்டிகளில் இப்போது ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், மொயின் அலி தோனி போன்றவர்கள்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை முடிவு செய்கின்றனர்.
சிஎஸ்கே உத்தேச அணி பட்டியல்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, எம்.எஸ்.டோனி, சர்துல் தாகூர், தீபக் சாஹர், லுங்கி நிகிடி, ஹாசில்வுட்