இந்த மேஜிக் நடந்தால் CSK ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு: தோனி இதை செய்தாக வேண்டும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால், கேப்டன் தோனி ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும்.
CSK அணி
ஐபிஎல் 2025 தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 போட்டிகளில் விளையாடிவிட்டது. ஆனால், CSK அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அந்த அணியின் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.
எனினும் கடைசியாக CSK அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதாவது, மீதமுள்ள 5 போட்டிகளில் விளையாடும் அணியில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
மிடில் ஓவர்களில் ஓட்டங்கள் வருவதில் சென்னை அணிக்கு இருக்கும் சிரமத்தை தோனியும், பயிற்சியாளர் பிளெமிங்கும் பேசி வருகின்றனர்.
அந்த வரிசையில் தீபக் ஹூடாவுக்கு பதிலாக வன்ஷ் பேடி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சில் சொதப்பும் பத்திரனாவுக்கு பதிலாக நாதன் எல்லிஸை கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.
சாம் கர்ரன், பத்திரனா
அத்துடன் பெரிதாக வாய்ப்பளிக்கப்படாத ஜேமி ஓவர்டனை (Jamie Overton) வைத்துக் கொண்டு சாம் கர்ரனை நீக்க வேண்டும்.
இந்த Combination அமையும் பட்சத்தில் CSK அணி தொடர் வெற்றிகளை பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே, இளம் வீரர்களான ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும், அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சிலும் மிரட்டியுள்ளனர்.
ஆனாலும், ஏனைய அணிகளின் போட்டி முடிவுகளில் மேஜிக் நிகழ்ந்தால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றுக்கு செல்வது சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |