தோனி இல்லாத CSK! 14.2 கோடிக்கு சிஎஸ்கே செய்த தரமான சம்பவம்: யார் இந்த கார்த்திக் சர்மா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் இடத்தை நிரப்பும் வீரராக 19 வயது இளம் வீரர் கார்த்திக் சர்மா பார்க்கப்படுகிறார்.
சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டியில் தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்.எஸ். தோனி தசைப்பிடிப்பு காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த செய்தியை சனிக்கிழமை அன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் முலம் முதல் இரண்டு வாரங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுடனான போட்டியின் போது தோனி விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
புதிய விக்கெட் கீப்பர் யார்?
தோனி விளையாடாத பட்சத்தில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பொறுப்பை சஞ்சு சாம்சன் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற வீரர்கள் பரிமாற்றத்தின் போது ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வில் இணைத்தனர்.

எதிர்கால திட்டம்
சஞ்சு சாம்சன் தற்போதைய மாற்றாக இருந்தாலும், தோனியின் நீண்ட கால இடத்தை நிரப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 வயது இளம் வீரர் மீது தன்னுடைய முழு நம்பிக்கையையும் வைத்துள்ளது.
2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட 19 வயது இளம் வீரர் கார்த்திக் சர்மா தான் சென்னை அணியின் அந்த நீண்ட கால திட்டமாக பார்க்கப்படுகிறார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட அன்கேப்ட்(uncapped) வீரர் கார்த்திக் சர்மா ஆவார்.

கார்த்திக் சர்மா கடந்த ஆண்டே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர்தர பயிற்சி மையங்களில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற நிலையில், அவர் அப்போதே தனது அதிரடியான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் மூலம் பயிற்சியாளர்களை ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் கார்த்திக் சர்மா தெரிவித்த கருத்தில், போட்டிகளை எப்படி வெற்றிகரமாக முடிப்பது என்பது குறித்தும், ஆட்டத்தின் திட்டமிடல் குறித்து தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்து இருந்தார்.
வலது கை பேட்ஸ்மேன் ஆன கார்த்திக் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என இருவரையும் சிதறடிக்கும் வல்லமை கொண்டவர் ஆவார்.
தோனி அணியில் இல்லாத பட்சத்தில் சிஎஸ்கேவின் இந்த இளம் நட்சத்திரம் எந்த அளவு அணிக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |