தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் யார்?
தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டர்ன் யார் என்பது தொடர்பிலான முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ஆம் திகதி மும்பையில் தொடங்குகிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்த சீசனிலும் தோனி தான் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
ஆனால் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு இப்போதே அடுத்த கேப்டனை அறிவித்து விடலாம் என்று தோனி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
தோனிக்கு பிறகு ரெய்னா என்ற காலம் போய் தற்போது அந்த இடத்திற்கு ஜடேஜா வந்துவிட்டதாக கூறப்படுகிறது. தோனி அணியில் இருக்கும் போதே ஜடேஜாவை தயார் படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும், நடப்பு சீசனிலேயே, அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி கொண்டு, ஜடேஜாவுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்றும் தெரிகிறது.
எனினும் இது சிஎஸ்கே வின் வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் அந்த முடிவு கெடுப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜடேஜாவுக்கும் வயது 33 ஆகி விட்டது. இதனால் தொடக்கத்திலேயே ஒரு இளம் வீரரை அணியில் கேப்டனாக நியமித்துவிடலாம் என ஸ்ரீனிவாசன் நினைக்கிறார். அவர் மனதில் 2 வீரர்கள் தான் உள்ளனர்.
அதிலில் முதலாவதாக இருப்பவர் ருத்துராஜ் கெய்க்வாட்
மற்றொருவர் தீபக் சாஹர். எப்படியிருந்தாலும் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்ற பெரும் எதிர்பார்ப்புக்குரிய கேள்விக்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.