சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் யார்? அவருடைய சொத்து மதிப்பு...!
சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட பெயர் என்றால் அது சீனிவாசன் தான்.
இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவரும் ஆவார். IPL இல் சென்னை அணியை வாங்கி அதற்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் பிரபலமான அணியாகும்.
நாடு முழுவதும் மிகவும் விரும்பப்படும் அணிகளில் இதுவும் ஒன்றாகும்.
2018 இல் நடந்த போட்டியில் கோப்பையை வென்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது.
CSK அணியின் உரிமையாளர்?
இந்தியா சிமெண்ட்ஸ் தற்போது CSK அணியின் உரிமையாளராக உள்ளது. அதாவது சீனிவாசன் உரிமையாளராக இருக்கிறார்.
இவர் சென்னை கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பட்டப்படிப்பை முடிப்பதற்காக சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்தார்.
2007 ஆம் ஆண்டு இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு என் சீனிவாசனின் உரிமையின் கீழ் $91 மில்லியன் ஏலத்தில் அணி விற்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு வாங்கியுள்ளார்.
சொத்து மதிப்பு
CSK உரிமையாளர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரின் நிகர மதிப்பு 720 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |