2026 ஐபிஎல் தொடருக்கு முன் 4 வீரர்களை விடுவிக்கும் CSK - புதிதாக யாருக்கு வாய்ப்பு?
2026 ஐபிஎல் தொடருக்கு முன் 4 வீரர்களை CSK அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரில், 5 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2025 ஐபிஎல் தொடரில், முதல்முறையாக புள்ளிப்பட்டியில் கடைசி இடம் பிடித்தது.
இதன் காரணமாக, அணியை பலப்படுத்தி, 2026 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் சிஎஸ்கே அணி நிர்வாகம் உள்ளது.
2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர், சில வீரர்களை விடுவித்து, புதிய வீரர்களைஅணிக்குள் கொண்டு வரும் முடிவில் உள்ளனர்.
2025 ஐபிஎல் தொடரின் போதே, ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், உருவில் பட்டேல் என சில இளம் வீரர்களை அணியில் சேர்த்தது.
4 வீரர்கள் விடுவிப்பு
மேலும், 4 வீரர்களை 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னால் CSK அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்ட அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 9 போட்டிகளில் விளையாடி, 7 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றினார்.
ராகுல் திரிபாதி
ரூ.3.40 கோடிக்கு வாங்கப்பட்ட ராகுல் திரிபாதி, 5 போட்டிகளில் விளையாடி, வெறும் 55 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 11.00 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 96.49 என்ற அளவிலே இருந்தது.
டெவோன் கான்வே
ரூ.6.25 கோடிக்கு வாங்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, 6 போட்டிகளில் விளையாடி, 156 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
தீபக் ஹூடா
ரூ.1.7 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் ஹூடா, 7 போட்டிகளில் விளையாடி, 31 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
புதிய வீரர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து, சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகமே ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது.
மேலும், அவுஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன், டோனோவன் ஃபெரீரா, தென் ஆப்பிரிக்கா வீரர் டோனோவன் ஃபெரீரா ஆகியோரை அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டி வருகின்றன.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் MLC தொடரில், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனோவன் ஃபெரீரா விளையாடி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |