CSK அணியில் முக்கிய மாற்றம் - புதிதாக களமிறங்கும் வீரர்கள்
சென்னை அணியில் சில புதிய வீரர்களை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுமாறும் சென்னை
ஐபிஎல் தொடர்களில் 5 முறை கோப்பை வென்ற சென்னை அணி இந்த தொடரில் தடுமாறி வருவதாக சென்னை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
2025 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
CSKவின் துடுப்பாட்ட நடுவரிசை பலவீனமாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி டெல்லிக்கு எதிரான போட்டியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ருத்துராஜ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கான்வே, வன்ஷ் பேடி, அன்சுல்
மேலும், நியூசிலாந்து வீரரான கான்வே(Devon Conwaய) அல்லது இந்திய வீரர் வன்ஷ் பேடியை(vansh bedi) களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கான்வே உள்ளே வந்தால், சாம் கரண் அல்லது ஜிம்மி ஓவர்டன் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக இந்திய வீரரை பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
ரஞ்சி கோப்பையில், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்திய அன்சுல் காம்போஜ்(anshul kamboj) வேகப்பந்துவீச்சாளராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுஷ் மாத்ரே
இதே போல் மும்பையை சேர்ந்த 17 வயதான ஆயுஷ் மாத்ரே(ayush mhatre) என்பவரை, சோதனைக்காக சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்துள்ளது.
இது குறித்து பேசிய சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன், "ஆயுஷ் மாத்ரேவை நாங்கள் சோதனைக்காக அழைத்திருக்கிறோம். அவரின் ஆட்டம் எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அணியில் புதிய வீரருக்கு தேவைபட்டால் அவரை ப்ளேயிங் XI-ல் சேர்க்கப்படலாம்" என தெரிவித்துள்ளார்.
ஆயுஷ் மாத்ரே, ரஞ்சி தொடரில் 8 போட்டிகளில் ஒரு இரட்டைசதத்துடன் 471 ஓட்டங்களும், விஜய் ஹசாரே தொடரில் சௌராஷ்டிர அணிக்கு எதிராக சதம் விளாசியதுடன் 7 போட்டிகளில் விளையாடி 458 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
மேலும், டெஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 150 ரன்கள் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஆயுஷ் மாத்ரே ஏலத்தில் எடுக்கப்படாத காரணத்தால், தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே, அவருக்கான மாற்று வீரராகவே எடுக்க முடியும்.
வரும் போட்டியில் சென்னை அணியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |