திடீரென அதிர்ச்சி கொடுத்த CSK வீரர்! பின்னர் வெளியான உண்மை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான அம்பத்தி ராயுடு, ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விலக போவதாக ட்வீட் செய்து பின் நீக்கியது கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக களமிறங்கிய அம்பத்தி ராயுடு, 2017 வரை அந்த அணையில் தொடர்ந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு CSK அணியில் இணைந்த அவர், நடப்பு ஐபிஎல் தொடர் வரை அந்த அணியிலேயே விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் தான் இது தான் தனது கடைசி ஐபிஎல் தொடர் என அம்பத்தி ராயுடு ட்வீட் செய்தார். அதில், 'இது தான் எனது கடைசி ஐபிஎல் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இரண்டு சிறந்த அணிகளுக்காக 13 ஆண்டுகள் விளையாடியது என் வாழ்வில் அற்புதமான காலம். இந்த அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் CSK அணிகளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல விரும்புகிறேன்' என பதிவிட்டார்.
இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சென்னை அணி ரசிகர்கள் அவருக்கு பிரியாவிடை அளித்து வந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூட ராயுடுக்கு பிரியாவிடை அளித்து ட்விட் செய்தார். ஆனால் சிறிது நேரத்தில் ராயுடு தனது ட்வீட்டை நீக்கிவிட்டார். இதனால் அனைவரும் குழம்பி போய்விட்டனர்.
இந்த நிலையில் அது தவறான தகவல் என்றும், ராயுடு ஓய்வு பெறவும் இல்லை நங்கைகள் வருத்தப்படவும் இல்லை என சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அடுத்த ஐபிஎல் சீசனில் கண்டிப்பாக ராயுடு விளையாடுவார் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அம்பத்தி ராயுடு பெரிதளவில் விளையாடவில்லை. விரைவாகவே அவரது விக்கெட்டை இழந்து விடுகிறார். அதனால் விரக்தியில் இப்படி ட்வீட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
36 வயதாகும் அம்பத்தி ராயுடு இதுவரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,187 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 22 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.