CSK அணிக்காக தோனி போடும் புதிய பிளான்: உற்சாகத்தில் CSK ரசிகர்கள் !
இன்று பெங்களுருவில் நடைபெற்று வரும் IPL வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராப்பின் உத்தப்பா மற்றும் பிராவோ ஆகிய இருவரை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
IPL மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கபட்டு இருந்த நிலையில் பெங்களுருவில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இரண்டு சுற்றுகள் வீரர்கள் ஏலம் முடிவடைந்த நிலையில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 12.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.
முதல் சுற்றின் முடிவில் IPLயின் முக்கிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் எந்த வீரரையும் வாங்கவில்லை. இந்த நிலையில் தொடங்கிய இரண்டாவது சுற்றில் தான் CSK அணி தனது முதல் வீரராக ராபின் உத்தப்பாவை 2 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.
இவர் கடந்த சீசனில் CSK அணிக்காக 4 போட்டிகளில் உத்தப்பா களமிறங்கியிருந்தார். அதில் குறிப்பாக பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டியில் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ராபின் உத்தப்பாவை தொடர்ந்து சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோவையம் சென்னை அணி 4.40 கோடிகளுக்கு ஏலத்தில் மீண்டும் எடுத்துள்ளது.
பல இளம் வீரர்கள் ஏலத்தில் வரிசைகட்டிக்கொண்டு நிற்கும் போது CSK அணி சீனியர் வீரர்களான உத்தப்பா மற்றும் பிராவோ ஆகியோர்களை தேர்ந்தெடுத்து இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
??? is Back! ?#SuperAuction #WhistlePodu ? pic.twitter.com/EAGZxZLGhO
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) February 12, 2022
Valentines day gift for anbana fans: dancing ?! #SuperAuction #WhistlePodu ?? pic.twitter.com/EYlFmlXVZi
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) February 12, 2022