மின்னல் வேக பீல்டிங்! துல்லியமான த்ரோ: ராகுலை ரன் அவுட் செய்து அனுப்பிய ஜடேஜா வீடியோ
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா மின்னல் வேக ரன் அவுட் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 8-வது ஆட்டத்தில், டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
அதன் படி, முதலில் ஆடி வரும் பஞ்சாப் அணி சற்று முன் வரை சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 6.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
You don't run a risky single to Sir Jadeja, You just don't. pic.twitter.com/dI8XZ80ync
— Abhi (@AbhiDusted) April 16, 2021
குறிப்பாக இப்போட்டியில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக பீல்டிங் செய்து வருகிறார். பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல், பந்தை ஜடேஜா பீல்டிங் நின்று கொண்டிருந்த திசை பக்கம் அடித்துவிட்டு, ரன் ஓடினார்.
ஆனால், அவர் தன்னுடைய மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். அதுமட்டுமின்றி கிறிஸ் கெய்லையும் தன்னுடைய அற்புதமான கேட்ச் மூலம் பவுலியன் அனுப்பினார்.
பஞ்சாப் அணியின் இரண்டு நட்சத்திர வீரர்களையும், ஜடேஜா தன்னுடைய சிறப்பான பீல்டிங் மூலம் வெளியேற்றியுள்ளதால், டுவிட்டரில் ரசிகர்கள் அவரை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.