டோனியை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா! அதிக தொகை கொடுத்து தக்க வைத்துக் கொண்ட CSK
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி தக்க வைக்கும் 4 வீரர்களை அறிவித்துள்ளதால், ரசிகர்கள் சிலருக்கு இதில் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
ஐபிஎல் என்றாலே சென்னை அணியை யாராலும் மறக்க முடியாது. அந்தளவிற்கு ஐபிஎல் தொடரில் உலக அளவில் ரசிகர்களின் பட்டாளத்தை கொண்ட அணி தான் சென்னை.
இதனால் சென்னை அணி எந்த நான்கு வீரர்களை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன் படி முதல் ஆளாக சென்னை அணி 16 கோடிக்கு ரவீந்திர ஜடேஜாவையும், 12 கோடிக்கு டோனியையும், 8 கோடிக்கு மொயின் அலியையும், ருத்ராஜ் கெய்க்வாட்டை 6 கோடிக்கும் தக்க வைத்துள்ளது.
ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டூபிளிசிஸை சென்னை அணி தக்க வைக்காததால், ரசிகர்களுக்கு இது ஒரு வித ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
The @ChennaiIPL retention list is out! ?
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
Take a look! ?#VIVOIPLRetention pic.twitter.com/3uyOJeabb6