திடீரென இலங்கைக்கு திரும்பிய CSKவின் பத்திரனா, தீக்ஷணா..வெளியான காரணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பத்திரனா, தீக்ஷணா இருவரும் இலங்கைக்கு திரும்பினர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் இலங்கையின் பத்திரனா, தீக்ஷணா இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர்.
குறிப்பாக பத்திரனா தனது மிரட்டலான பந்துவீச்சினால் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறார்.
இந்த நிலையில் பத்திரனா, தீக்ஷணா இருவரும் இலங்கைக்கு சென்றுள்ளனர். டி20 உலகக்கிண்ண தொடருக்கான அணியில் அவர்கள் இடம்பெற்றிருப்பதால், கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான பணிகளுக்காக இலங்கை சென்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
அதன் செயல்முறைகள் முடிந்த பின்னர் இருவருமே CSK அணிக்கு திரும்புவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், ''இலங்கை வீரர்கள் விசா பெற உள்ளனர். எனவே அவர்களின் செயல்முறை இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் எங்களின் அடுத்த போட்டியில் அவர்களை திரும்பப் பெறுவோம்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |