CSK அணிக்கு பேரதிர்ச்சி: தொடரில் இருந்து விலகும் மற்றொரு வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராமகிருஷ்ண கோஷ் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மற்றொரு CSK வீரர் விலகல்
நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளரான ராமகிருஷ்ண கோஷ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ராமகிருஷ்ண கோஷ் வெறும் 24 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
OFFICIAL ANNOUNCEMENT:
— Chennai Super Kings (@ChennaiIPL) May 3, 2026
Ramakrishna Ghosh sustained a fracture to his right foot during the CSK v MI match at Chepauk.
He will take no further part in IPL 2026.
Get well soon, Rambo. pic.twitter.com/CQve4zLixG
மேலும் போட்டியின் மிக முக்கிய விக்கெட்டான சூர்யகுமார் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் ராமகிருஷ்ண கோஷ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவரது பயணம் நேற்றைய ஒருப் போட்டியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்தடுத்து விலகும் வீரர்கள்
ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீரர் நாதன் எல்லீஸ் 2026 ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார்.

மாற்று வீரராக எடுக்கப்பட்ட ஸ்பென்சர் ஜான்சன் முதல் பாதி போட்டிகளில் பங்கேற்கவில்லை. டெவால்டு பிரேவிஸ் காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாட வில்லை.
கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே என அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து விலகி வருகின்றனர்.
தற்போது இந்த வரிசையில் ராமகிருஷ்ண கோஷ்-உம் இணைந்து இருப்பது CSK ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |