மைதான கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய சிஎஸ்கே வீரர்கள் - வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்துள்ளனர்.
பயிற்சி மேற்கொண்டுள்ள வீரர்களின் வீடியோக்களை அந்தந்த அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. அதன்படி சென்னை அணி நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேல் நடித்த காண்ட்ராக்டர் நேசமணியின் வசனத்தை எடிட் செய்து அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் வீரர்களின் பயிற்சி முறையும், அவர்கள் அடித்த பந்தால் உடைந்த நிலையில் காணப்படும் மைதானத்தின் கண்ணாடிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
?️ Contractor Nesamani at ?'s camp in Surat!#Yellove #WhistlePodu ?? pic.twitter.com/QczpZyuXQN
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) March 14, 2022