ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு பதிலாக மும்பை வீரரை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே! வெளியான அதிகாரப்பூர் அறிவிப்பு
2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு பதிலாக புதிய வீரரை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
2021 ஐபிஎல் தொடலிருந்து விலகிய ஜோஸ் பதிலாக அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் Jason Behrendorff-ஐ சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இடது கை வேகபந்து வீச்சாளரான Jason Behrendorff (30) அவுஸ்திரேலியா அணிக்காக இதுவரை 11 ஒரு நாள் மற்றும் 7 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வீரராக தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கிய Jason Behrendorff, இதுவரை மும்பை அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 114 ஓட்டங்கள் எடுத்துள்ளார் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
துபாயில் நடந்த 2020 ஐபிஎல் தொடரில் Jason Behrendorff விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
