பிராவோவை கழட்டி விட தயாராகும் சென்னை அணி - குறி வைக்கப்படும் முக்கிய வீரர்
ஐபிஎல் தொடரில் சென்னை அணி நட்சத்திர வீரர் டுவைன் பிராவோவிற்கு பதிலாக வேறு வீரரை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2022 மெகா ஏலம் நெருங்கி வருவதால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் புதிய புதிய தகவல்கள் உலா வருகின்றது.
அந்த வகையில் சென்னை அணியில் தோனியின் நெருங்கிய நண்பரும், சிஎஸ்கேவுக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவருமான டுவைன் பிராவோவை மெகா ஏலத்தில் எடுக்கப் போவதில்லை என சொல்லப்படுகிறது.
முன்னர் மாதிரி பவுலிங் , பேட்டிங் என அனைத்திலும் அவர் சொதப்பி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.பிராவோவிற்கு பதிலாக மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டரை சிஎஸ்கேவுக்குள் கொண்டு வர தோனி திட்டமிட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக ஜேசன் ஹோல்டரின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளது இதற்கு காரணமாகும்.