ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத நிலையில் என் எதிர்கால திட்டம் இதுதான்! மனம் திறந்த சுரேஷ் ரெய்னா
ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத நிலையில் தனது எதிர்கால திட்டம் குறித்து சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.
2022 ஐபிஎல் ஏலம் இரண்டு நாட்கள் நடைபெற்று முடிந்தது. இதில் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்த விடயம் என்னவென்றால் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் விலைக்கு வாங்காதது தான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக இருந்த ரெய்னாவை அந்த அணியும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சென்னை அணி நிர்வாகத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த ரெய்னா பேசுகையில், எனக்கு கிரிக்கெட் தான் முதல் காதல். என்னுடைய உயிர் மூச்சு கிரிக்கெட். எனவே கிரிக்கெட் தொடர்பான வேலைகளை தொடர்ந்து செய்வேன் அரசியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.
அது குறித்த தெளிவும் எனக்கு இல்லை என்பதனால் நிச்சயம் அரசியலில் ஈடுபட மாட்டேன்.
கிரிக்கெட் சார்பான பணிகளை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.
இதோடு பல இடங்களை சுற்றி பார்க்கும் திட்டமும் உள்ளது என கூறியுள்ளார்.