CSK அணி ஐபிஎல் ஏலத்தில் தட்டி தூக்க போகும் வீரர்கள் இவர்கள் தான்! கசிந்தது பட்டியல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை எல்லாம் ஏலத்தில் எடுக்கும் என்ற தகவல் தற்போது வெளியில் கசிந்துள்ளது.
2022 ஐபிஎல் 15வது சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏலத்தின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சில முக்கிய வீரர்களை திட்டம்போட்டு தட்டித்தூக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவன், ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் ஆகியோரை ஏலம் எடுக்க சிஎஸ்கே தீவிரம் காட்டும் எனத் தெரிகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்டுன் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவன் களமிறங்கினால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தினால்தான் அவரை வாங்க நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.
தவான், பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில்கூட தொடர்ச்சியாக ரன்களை அடிக்க கூடியவர். சென்னை மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால்தான், அஸ்வின் மற்றும் சுந்தரை வாங்கும் எனக் கருதப்படுகிறது.