CSK அணிக்கு திரும்பும் 2 தமிழக வீரர்கள் உட்பட 3 பழைய வீரர்கள்! டோனியின் மிரட்டலான திட்டம்
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பழைய வீரர்களை அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜா, டோனி, ருதுராஜ், மொயின் அலி ஆகியோரை தக்கவைத்து கொண்டது. இந்நிலையில் அந்த அணியில் இருந்து வெளியேறிய பழைய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வரலாம் எனத் தெரிகிறது.
அதன்படி இந்த பட்டியலில் முதல் தேர்வாக தமிழக வீரர் விஜய் சங்கர் உள்ளார். விஜய் சங்கர் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக கடந்த 2014ம் ஆண்டு ஓப்பந்தமானார். ஆனால் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய பின்னர் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
அடுத்ததாக மற்றொரு தமிழக வீரர் அஸ்வினை சிஎஸ்கே ஏலம் எடுக்கலாம். இவர் 2009 முதல் 2015 வரை 97 போட்டிகளில் சிஎஸ்கேவுகாக விளையாடியுள்ளார்.
அதே போல டுவைன் பிராவோவின் இடத்திற்கு ஜேசன் ஹோல்டரை குறிவைத்துள்ளது சிஎஸ்கே.
இந்த தகவல்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.