ரன்களை குவிக்கும் இளம் வீரருக்கு அவசர அழைப்பு விடுத்த CSK அணி! செம ஜாக்பாட் தான்
இளம் வீரர் சுப்ரான்சு சேனாபதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.
2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் முயற்சியை எடுக்கவுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேடி தான் ருத்துராஜ் கெய்க்வாட்டை சென்னை அணி தேர்வு செய்தது. தற்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக மாறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வாங்கி தந்தார். தற்போது, அதே போல் இன்னொரு ருத்துராஜ் கெய்க்வாட்டை கண்டுபிடித்துள்ளது சென்னை அணி.
ஆம், ஓடிசாவை சேர்ந்த 24 வயதான சுப்ரான்சு சேனாபதியை தான் சென்னை அணி தற்போது குறிவைத்துள்ளது. சேனாபதி விஜய் ஹசாரே கோப்பையில் ஓடிசா அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது வரை 7 போட்டிகளில் அவர் 275 ரன்கள் விளாசியுள்ளார். அதில் ஒரு சதமும் அடங்கும்.
இதனால் அவரை சென்னைக்கு அழைத்து, அவரது பேட்டிங்கை பரிசோதித்து பார்க்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. இதனால் ஏலத்தில் சேனாபதியை சென்னை அணி குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி சென்னை அணி சேனாபதியை எடுத்தால் அது அவருக்கு பெரிய ஜாக்பாட் என்பதில் சந்தேகமில்லை.