சென்னை அணியின் த்ரில் வெற்றி! துள்ளிக் குதித்த பிராவோ: சோகத்துடன் சென்ற கம்மின்ஸ் வீடியோ
சென்னை அணிக்கெதிரான போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்ததால், அந்தணி வீரர் பேட் கம்மின்ஸ் சோகத்துடன் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஒரு கட்டத்தில் சென்னை அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று நினைத்த போது, கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி போட்டியையே விறு விறுப்பாக கொண்டு சென்றார்.
The winning moment for CSK and heartbreak for Cummins and KKR.#KKRvCSKpic.twitter.com/odH9cmy8un
— Cricbuzz (@cricfuzz07) April 21, 2021
இதனால் கொல்கத்தா அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பது போன்று போட்டி மாறியது. ஆனால் கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணி 19.1 ஓவரில் ஆல் அவுட் ஆகியதால், தோல்வியை சந்தித்தது.
அதிரடியாக விளையாடி பேட் கம்மின்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல், 34 பந்தில் 66 ஓட்டங்கள் குவித்தார். இப்படி வெற்றி அருகில் வந்தும், ஆட்டம் போய்விட்டதே என்ற ஏக்கத்தில், அவர் நடக்க, ஒரு புறம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில், மைதானத்திற்கு வெளியில் இருந்த டேவைன் பிராவோ போன்றோர் துள்ளிக் குதித்தனர்.
இதன் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.