சிஎஸ்கே அணிக்கு வரும் இங்கிலாந்து வீரர்? துபே விடுவிக்கப்படுவாரா?
csk likely to get Liam Livingstone from srh by trade: 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 17 ஆம் திகதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அணிகள் வீரர்களை ட்ரேடிங் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.
சிஎஸ்கே அணிக்கு வரும் இங்கிலாந்து வீரர்?
அதே போல், டிசம்பர் 16 அன்று கோவாவில் நடைபெற உள்ள மினி ஏலத்திற்கு முன் கையிருப்புத் தொகையை உயர்த்த, கடந்த மெகா ஏலத்தில் தலா ரூ.14.2 கோடிக்கு வாங்கப்பட்ட இளம் வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவரில் ஒருவரை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
மும்பை வீரர் ஹர்திக் பாண்டியாவை ட்ரேடிங் மூலம் வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியாவை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை வாங்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக கலீல் அகமதுவை வழங்க சிஎஸ்கே முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் , வேகப்பந்து வீச்சாளரான ரபாடா மற்றும் சுழற்பந்து ஆல்ரவுண்டர் சாய் கிஷோர் அல்லது வாஷிங்டன் சுந்தரை வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இவருக்கு மாற்றாக, உர்வில் படேல் அல்லது ஷிவம் துபே இருவரில் ஒருவரை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.