11வது வீரராக களமிறங்கி சதம்! ரஞ்சி டிராபியில் மிரட்டிய CSK வீரர் துஷார் தேஷ்பாண்டே
ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர் துஷார் தேஷ்பாண்டே(Tushar Deshpande ) ரஞ்சி கோப்பை தொடரில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த துஷார் தேஷ்பாண்டே
சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணிக்காக ஐ.பி.எல் (Indian Premier League, IPL) போட்டிகளில் விளையாடும் மும்பை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, செவ்வாய்க்கிழமை ரஞ்சி டிராபியில்(Ranji Trophy) வரலாறு படைத்தார்.
மும்பை - பரோடா இடையிலான ரஞ்சி டிராபி போட்டியில், 11வது வீரராக களமிறங்கி அபார சதம் அடித்து அனைவரையும் கவர்ந்தார்.
129 பந்துகளில் 123 ஓட்டங்கள் குவித்துள்ள தேஷ்பாண்டே, இந்திய முதல் தர கிரிக்கெட்டில் 11வது வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டார்.
இதற்கு முன்பு 1946 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஷூட் பானர்ஜி(Shute Banerjee) என்பவர் 121 ஓட்டங்கள் எடுத்து இருந்தார். இவரது சாதனையை முறியடித்துள்ளார் தேஷ்பாண்டே.
10வது விக்கெட்டில் இணைந்த ஜோடி
இந்த சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், மும்பை அணியின் மற்றொரு வீரரான தனுஷ் கோட்டியனுடன்(Tanush Kotian) இணைந்து தேஷ்பாண்டே சாதனை கூட்டணி அமைத்துள்ளார்.
10வது விக்கெட்டுக்காக இவர்கள் இணைந்து 232 ஓட்டங்கள் குவித்துள்ளனர். இது ரஞ்சி கோப்பையில் 10வது விக்கெட்டுக்காக பதிவான இரண்டாவது அதிக கூட்டணி ஆகும். முதலிடத்தை வெறும் 1 ஓட்டம் வித்தியாசத்தில் தவற விட்டுள்ளனர்.
தேஷ்பாண்டேயின் இந்த சாதனை, ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், அவருடைய ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கையிலும் மைல் கல் ஆக அமையும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கடைசி ஓவர்களில் இவரது துல்லியமான யார்க்கர் பந்து வீச்சு அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Tushar Deshpande Ranji Trophy century,
Mumbai cricketer scores century at No. 11,
Highest score by No. 11 batsman in Ranji Trophy,
Tushar Deshpande record-breaking partnership,
Mumbai vs Baroda Ranji Trophy score,
tushar deshpande century,
tushar deshpande ranji trophy,
highest score by no 11 batsman in ranji trophy,
mumbai vs baroda ranji trophy,
tushar deshpande csk,