தேர்தல் காரணமாக CSK விளையாடும் 2 போட்டிகளில் மாற்றம்
தேர்தல் காரணமாக CSK விளையாடும் 2 போட்டிகளின் மைதானம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
CSK போட்டிகளில் மற்றம்
2026 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி, மே 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
13 இடங்களில் போட்டிகள் நடைபெறும் நிலையில், 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் அதனடிப்படையிலே ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது.

தற்போது, அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பிற பகுதிகளில் நடைபெறவிருக்கும் மாநகராட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இரு போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 26 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவிருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான பிற்பகல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 03:30 மணிக்குத் தொடங்க உள்ளது.
🚨 NEWS 🚨@gujarat_titans - @ChennaiIPL fixtures swapped for April 26 and May 21, owing to municipal corporation elections in Ahmedabad and other parts of Gujarat!
— IndianPremierLeague (@IPL) April 13, 2026
More Details 🔽 | #TATAIPL | #KhelBindaashttps://t.co/xDibwhhT8C
மே 21 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான, தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 07:30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |