ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை தட்டித்தூக்கிய சென்னை

Chennai Super Kings Gujarat Titans IPL 2023
By Arbin May 29, 2023 08:08 PM GMT
Report

மழை காரணமாக குறைக்கப்பட்ட 15 ஓவர்கள் இறுதிப் போட்டியில் சென்னை அணி அபார வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

வென்ற சென்னை அணி

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே சுப்மன் கில் விக்கெட்டை தீபக் சாஹர் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய கில் சிக்சரும் பவுண்டரிகளுமாக தெறிக்க விட்டு அசத்தினார்.

ஆனால் 20 பந்துகளில் 39 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக விருத்திமான் சஹாவுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் சஹா ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுபக்கம் சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை தட்டித்தூக்கிய சென்னை | Csk Vs Gujarat Titans Final

சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன்

அதிரடி காட்டிக் கொண்டிருந்த இந்த ஜோடியில் சஹா 54 (39) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார். அடுத்து களமிறங்கிய ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 21 (12) ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்தது. இதனையடுத்து 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை தட்டித்தூக்கிய சென்னை | Csk Vs Gujarat Titans Final

3 பந்துகள் வீசப்பட்டநிலையில் தீடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து போட்டி 15 ஒவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணிக்கு 171 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்கள்

இதனையடுத்து களத்தில் இருந்த ருதுராஜ் மற்றும் டிவான் கான்வே குஜராத் பந்துவீச்சை நொறுக்கத் தொடங்கினர். 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்கள் குவித்தனர்.

ஆனால் அடுத்த ஓவரில் நூர் அஹ்மத் பந்துவீச்சில் ருதுராஜ் மற்றும் கான்வே அடுத்தடுத்து வெளியேறினர். ருதுராஜ் 16 பந்துகளில் 26 ஓட்டங்களும் கான்வே 25 பந்துகளில் 47 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை தட்டித்தூக்கிய சென்னை | Csk Vs Gujarat Titans Final

தொடர்ந்து ஷிவம் தூபே மற்றும் ரஹானே களமிறங்கினர். இதில் ரஹானே 27 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ராயுடு, தோனி என விக்கெடுகளை கைப்பற்றி மோகித் ஷர்மா நெருக்கடி அளித்தார். 

 ராயுடு 19 ஓட்டங்களுடனும் தோனி கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழக்க, இறுதியில் ஜடேஜா 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து, சென்னை அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார். ஷிவம் தூபே 32 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US