சென்னையிடம் தோற்றது மும்பை - தோனி குறித்து பேசிய ஹர்திக்; கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நேற்று 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) சென்னை அணி குறித்து பேசியுள்ளார்.
20 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற CSK
2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தது.
ருதுராஜ் 69 ஓட்டங்களும் துபே 66 ஓட்டங்களையும் எடுத்திருந்தார்கள். 206 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களத்திற்குள் துடுப்பெடுத்தாட மும்பை அணி நுழைந்தது.
முதலில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கி அதிரடியாக விளையாடி, முதல் விக்கெட்டுக்கு 70 ஓட்டங்களை குவித்தனர்.
தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் மும்பை அணி 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் கருத்து
மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா அவர்களது தோல்வி குறித்து பேசுகையில், 'எதை செய்தால் பலன் கொடுக்கும் என கூறுவதற்கு CSK வீரர்களுக்கு ஸ்டம்ப்களுக்கு பின்னால் ஒருவர் இருக்கிறார். அது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |