தோனிக்கு வெற்றியை பரிசளிப்போம்..! CSK வீரர் ரவீந்திர ஜடேஜா சூளுரை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று அதனை தோனிக்கு சமர்பிப்போம் என ரவீந்தர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.
இரண்டு அணிகளும் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், தலா இரண்டு வெற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருவதால், இந்த போட்டியை காண சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
வெற்றியை தோனிக்கு சமர்பிப்போம்
மேலும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தனது 200வது போட்டியில் தோனி விளையாட உள்ளார்.
இதனால் இந்த போட்டியில் நிச்சயமாக சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ற கருத்து ஒன்றை CSK வீரர் ஜடேஜா வெளியிட்டுள்ளார்.
அதில் நாளைய போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி விளையாடும் 200வது போட்டியை வென்று அவருக்கு பரிசளிப்போம் என தெரிவித்துள்ளார்.