முன்னாள் CSK வீரரை எடுக்க போட்டிப்போடும் IPL அணிகள்: 11 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு!
முன்னாள் CSK வீரர் டு பிளேசிஸ் அணியை தலைமை தாங்கும் திறன் இருப்பதால், அவரை ஏலத்தில் எடுக்க பெரும்பாலான அணிகள் முயற்சிக்கும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான IPL போட்டிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும்13ம் திகதிகளில் நடைபெற உள்ளது. இதில் அணிகள் தங்களுக்கு தேவையான 3 வீரர்களை மட்டும் தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்கு விடிவித்துள்ளனர்.
அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டு பிளேசிஸ்சை தக்கவைக்காத நிலையில் அவரும் இந்த மெகா ஏலத்தில் இணைந்துள்ளார். டு பிளேசிஸ் கடந்த முறை நடந்த IPL போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்தார். மேலும் முதல்நிலையில் களமிறங்கி தனது நிதானமான ஆட்டத்தால் அணியினை அதிக ரன் குவிக்க வித்திடுவார்.
மேலும் அவருக்கு தென் ஆப்பிரிக்கா அணியை தலைமை தாங்கிய அனுபவமும் இருப்பதால் அவரை தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள பெரும்பாலான அணிகள் முயற்சிக்கும் என பிராட் ஹோக் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டு பிளேசிஸை திரும்ப ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரை எடுக்க சென்னை, பெங்களூரு, கொல்கத்தா பஞ்சாப் என நான்கு அணிகள் போட்டி போடக்கூடும் என்பதால் டு பிளேசிஸ் 7 கோடி முதல், 11 கோடி வரை ஏலத்தில் போகலாம் என்று பிராட் ஹோக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயர், ரபாடா, ஷமி போன்ற வீரர்களுக்கும் அதிக தொகையில் ஏலத்திற்கு வாங்கப்படலாம் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹோக் தனது அதிகாரப்பூர்வ யூ டியூப் தளத்தில் தெரிவித்துள்ளார்.