சென்னையை வீழ்த்திய பின்பு பிராவோ மீது தாவி குதித்து வெற்றியை கொண்டாடிய ஹிட்மயர்! வெளியான வீடியோ
சென்னை அணிக்கெதிரான வெற்றிக்கு பின்பு, பிராவோ மீது ஏறி ஹிட்மயர் வெற்றியை கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் புள்ளிப் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் இருக்கும் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள இரு அணிகளும் மோதிக் கொள்வதால், ஆட்டம் பரபரப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
— AjBRO (@DGreatCricket) October 4, 2021
அதே போன்று நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் டெல்லி அணி தோற்றுவிடும் என்ற நிலை இருந்த போது, கடைசி கட்டத்தில் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்கரரான ஹிட்மயர் 18 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதனால், இப்போட்டியின் வெற்றிக்கு பின் ஹிட்மயர், சென்னை அணியின் பந்து வீச்சாளரான டேவைன் பிராவோ மீது தாவி குதித்து வெற்றியை கொண்டாடினார். ஏனெனில் கடைசி ஓவரை சென்னை அணியின் ஆல்ரவுண்டரான டேவைன் பிராவோ தான் வீசினார். அவரின் ஓவரில் தான் டெல்லி அணி வெற்றிக்கான ஓட்டத்தை பதிவு செய்தது.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.