முதல் வெற்றியை பதிவு செய்த தோனியின் படை! மாயாஜால சுழலில் விழுந்த விக்கெட்டுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
CSK 217 ஓட்டங்கள் குவிப்பு
சென்னை MA சிதம்பரம் மைதானத்தில் நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய CSK அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் குவித்தது.
ருதுராஜ் கெய்க்வாட் 57 (31) ஓட்டங்களும், கான்வே 47 (29) ஓட்டங்களும் விளாசினர். லக்னோ அணியின் தரப்பில் மார்க் வுட், பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Quick cameos on throttle! ?⚡️#CSKvLSG #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/8W5y3nUYEm
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
அதன் பின்னர் களமிறங்கிய லக்னோ அணியில் கே.எல்.ராகுல் 20 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ஹூடா, குர்னால் பாண்ட்யா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
Safe and Sound! ??#CSKvLSG #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/QH9XH50ndT
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
கைல் மேயர்ஸ் மிரட்டல் ஆட்டம்
மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்தார். வெற்றிக்காக போராடிய நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
मायर्स की ई पारी देख तो हमार करेजा हिल गईल ❤
— Lucknow Super Giants (@LucknowIPL) April 3, 2023
और रउआ लोग तोहार? ?#CSKvLSG | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/1mO2XR7DtP
மொயீன் அலி விக்கெட்டுகளை கைப்பற்றியதால் இறுதியில் தடுமாறிய லக்னோ அணி 205 ஓட்டங்கள் எடுத்து, 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை அணிக்கு முதல் வெற்றி
சென்னை அணியின் தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளும், துஷர் தீஷ்பாண்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். குஜராத் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது முதல் வெற்றி ஆகும்.
This one’s for you, Anbuden! ?#CSKvLSG #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/tmxYaVP7z4
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
Heavy is the mettle.! ?#WhistlePodu #Yellove ? pic.twitter.com/CLFSdKRXNm
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023