சொல்லியடித்த சென்னை... ராசின், கெய்க்வாட் அதிரடி
தனியொருவனாக 65 ஓட்டங்கள் குவித்து சென்னை அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார் ராசின் ரவீந்திரா.
பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். தொடர்நது ரிக்கல்டன் 13 ஓட்டங்களில் வெளியேறினார்.
வில் ஜேக்ஸ் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். சூர்யகுமார் யாதவ் 29 ஓட்டங்களும், திலக் வர்மா 31 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த வீரர்கள் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ஓட்டங்கள் எடுத்தது.
ராசின் ரவீந்திரா 65
இதையடுத்து 155 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 2 ஓட்டங்களில் ஏமாற்றமளித்தார். ருதுராஜ் கெய்க்வாட் 53 ஓட்டங்களில் வெறியேறினார்.
சிவம் துபே (9), தீபக் ஹூடா (3), சாம் கர்ரன் (4) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ராசின் ரவீந்திரா 65 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். ரவீந்திர ஜடேஜா 17 ஓட்டங்களில் வெறியேறினார்.
இறுதியில் சென்னை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 158 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |