நடப்பு சீஸனில் மோசமான சாதனையை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்: கடைசிப் போட்டியில் வெற்றி கிட்டுமா?
ஐபிஎல் 2025யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.
அடுத்தடுத்து தோல்விகள்
டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
நடப்பு சீஸனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி சந்தித்த 10வது தோல்வி இதுவாகும்.
இதன்மூலம் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 10 தோல்விகளை சந்தித்ததால் மோசமான சாதனை சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்துள்ளது.
கடைசிப் போட்டி
இந்த சீசனில் சென்னை அணியின் செயல்பாடு மோசமாக இருப்பதாக, அதன் ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் கடைசி போட்டியிலாவது வெற்றி பெறுமா என எதிர்பார்க்கின்றனர்.
புள்ளிப்பட்டியலில், முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை 25ஆம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |