'மஞ்சள் ஜெர்சியில் வர ஆசைப்படுறேன்'' ரசிகர்களை கண்கலங்கவைத்த ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல விரும்புவதாக கூறி ரசிகர்களை கண்கலங்கவைத்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், 6 விக்கட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி சென்னையை வீழ்த்தியது. இந்த போட்டி தொடங்கும் முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, வர்ணனையாளராக ரசிகர்கள் முன் காட்சியளித்தார்.
அவரை கண்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மஞ்சள் நிற ஜெர்சியில் தங்களை மிஸ் செய்வதாகவும், உங்களை இப்படி பாப்போம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை எனக்கூறி, ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைத்தனர்.
Suresh Raina ?? pic.twitter.com/nztD5RcO4E
— Kanan Shah (@KananShah_) March 26, 2022
அதனைதொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேட்டியளித்த ரெய்னா, இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்னதாக மைதானத்தை கடந்து வரும்பொழுது, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளார். ரெய்னாவின் இந்த பேச்சு, சென்னை ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தின்போது அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதன் காரணமாக அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.