மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.
ஸ்ரீலீலா தனது திரைப்பயணத்தை கன்னட திரைப்படமான கிஸ் மூலம் தொடங்கினார்.
அவரின் தாய்மொழி தெலுங்கு. அதேசமயம் தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நன்றாக பேசக்கூடியவர்.

இவர் தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே அவருக்கு தமிழில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில், படிப்பிலும் சிறந்தவரான ஸ்ரீலீலா தனது மருத்துவ படிப்பை முடித்து, அதிகாரப்பூர்வமாக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இவரது தாய் மருத்துவர் என்பதால், தனது மகளும் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
#SreeLeela has officially graduated, completing her medical degree ❤️
— Siddarth Srinivas (@sidhuwrites) February 11, 2026
Acting + academics - win win! pic.twitter.com/sisosEPRTZ
அந்தவகையில், இவரது பட்டமளிப்பு விழா பிப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்றது.
அதற்கான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிற நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |