ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது - அமைச்சர் நிர்மல் குமார்
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார்.
ஜோசியக்காரர் சொன்னால்தான் கோப்புகளை திறப்பீர்களா?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "சில தினங்களுக்கு முன் பேரவையில் பேசிய முதலமைச்சர், தனது டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதனை திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த கோப்புகளை தயவு செய்து திறந்து பாருங்கள். ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள், இதையே 3 மாதமாக சொல்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? என பேசியுள்ளார்.
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "ஜோசியம் என சொன்னார். ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது.

அதனால் எதை செய்தாலும், வெளிப்படையாக எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் செய்ய தெரியும். எதை எப்போது எடுக்க வேண்டும் என தெரியும். எல்லா துறைகளிலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பேசியுள்ளார்.
முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மஞ்சள் துண்டு அணியும் வழக்கமுடையவர். ஆத்தீகரான அவர் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு அணிபவர் என மறைமுகமாக திமுகவை சீண்டும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |