பிரான்சில் ஓடும் ரயிலில் கேட்ட குவா குவா சத்தம்: தாமதமான ரயில்
பிரான்சில் ரயில் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள், அசாதாரண காரணம் ஒன்றிற்காக தாமதத்தை சந்திக்க நேர்ந்தது.
ரயிலில் கேட்ட குவா குவா சத்தம்
சென்ற வார இறுதியில், பாரீஸிலிருந்து Strasbourg செல்லும் அதிவேக ரயில் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட, ரயில் Louvigny என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டிக்கு வரவழைக்கப்பட்ட மருத்துவர் குழு அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க, ஃபெலிக்ஸ் என்னும் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்தப் பெண்.
ரயில் பயணிகளுக்கு தகவல் கூறப்பட்டு அவர்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட, தாயும் சேயும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
80 நிமிட தாமதத்துக்குப் பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
Representative Image. Credit