கனடாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய கியூபா: வெளியான காரணம்
அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் கனேடிய குடும்பத்திற்கு எற்பட்ட துயரத்திற்கு கியூபா நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது.
கியூபா நிர்வாகம்
மார்ச் மாதம் கியூபாவுக்கு விடுமுறைக்கு சென்றபோது கனேடியர் ஒருவர் இறந்த நிலையில், அதிகாரிகள் தற்செயலாக மற்றொரு நபரின் சடலத்தை அந்த குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
I talked by phone with FM @melaniejoly about unfortunate incident related to the transfer of corpse of Canadian citizen who died in Cuba.
— Bruno Rodríguez P (@BrunoRguezP) April 24, 2024
Cuban authorities investigate to clarify incident. I conveyed heartfelt condolences & apologies to relatives and friends of the deceased.
இந்த விவகாரத்திலேயே தற்போது கியூபா நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது. சிரியா வம்சாவளி கனேடியரான Faraj Jarjour என்பவர் மார்ச் 22ம் திகதி Varadero என்ற கடற்கரை ஓய்வு விடுதியில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
ஆனால் பல வாரங்களுக்கு பின்னர், கியூபாவில் இருந்து கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சடலமானது ஒரு இளைஞர் என்பதை அறிந்து, Faraj Jarjour குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த விவகாரம் கியூபா நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் Bruno Rodriguez தெரிவிக்கையில்,
கனேடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly உடன் இந்த விவகாரம் தொடர்பில் தாம் பேசியுள்ளதாகவும், இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என்றும் சமூக ஊடக பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.
பிரபலமான விடுமுறை இலக்கு
மட்டுமின்றி, கியூபா அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இறந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் Bruno Rodriguez தெரிவித்துள்ளார்.
கியூபாவில் இருந்து Faraj Jarjour-ன் சடலம் அனுப்பி வைக்கப்படுவதையும் எதிர்பார்த்து அவரது குடும்பம் காத்திருக்கத் தொடங்கி, ஒரு மாதம் கடந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை இருந்த போதும் கியூபா எப்போதும் கனேடியர்களின் பிரபலமான விடுமுறை இலக்குகளில் ஒன்றாகவே உள்ளது.
இதனிடையே, கனேடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly-உம் இந்த விவகாரம் குறித்து கியூபா அமைச்சர் தொடர்புகொண்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |