சுவையான இந்த காயை சாப்பிட்டால் சிறுநீரக அமைப்பு பாதிக்கலாம்! இதயத்திற்கு அபாயம் உஷார்
வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!
ஒரு சிறந்த ஹைட்ரேட்
சுமார் 90% தண்ணீரை கொண்டிருப்பதால் வெள்ளரிக்காய் ஒரு சிறந்த ஹைட்ரேட் மற்றும் கூலிங்கான உணவாக இருக்கின்றன.
மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் லிக்னான்ஸ் எனப்படும் பாலிபினால்கள் வெள்ளரிகளில் உள்ளன. கலோரிகள் குறைவாகவும், ஃபைபர் சத்து அதிகமாகவும் இருப்பதால் எடை இழப்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு வெள்ளரி பெரிதும் உதவுகிறது.
dailyfreshveg
வெள்ளரியில் பொட்டாசியம்
90% தண்ணீர் கொண்ட வெள்ளரியின் அரிதான பக்க விளைவுகளில் ஒன்று சிறுநீரக பாதிப்பு. வெள்ளரியில் பொட்டாசியம் நல்ல அளவு அடங்கி இருக்கிறது. வெள்ளரிகளை அதிகமாக உட்கொள்வது ஹைபர்கேலீமியாவைத் தூண்டலாம், இது உடலில் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால் ஏற்படும் ஒரு அரிய மருத்துவ நிலை. பொட்டாசியம் நிறைந்த வெள்ளரியை அதிகம் சாப்பிடுவது சில சமயங்களில் சிறுநீரக அமைப்பு மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கலாம்.
வெள்ளரிகளில் சுமார் 90% நீர் இருப்பதால் அதிகம் சாப்பிடும் போது ரத்த நாளங்களில் ஓடும் ரத்தத்தின் நிகர அளவை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்திற்கு அழுத்தம் அதிகரிக்கிறது. இது எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைத்து ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது.
narayanahealth