தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்தை பெற வெள்ளரிக்காய்; எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாகவே அனைவரும் அழகான சருமத்தை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக பல முயற்சிகளையும் செய்வது உண்டு.
ஆனால் வெள்ளரிக்காயை ஒரு நாளாவது சருமத்திற்காக பயன்படுத்தி இருக்கீங்களா? இல்லை என்றால் உடனே இதை செய்து பாருங்க.
வெள்ளரிக்காயானது ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. இது பல்வேறு தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும்.
வெள்ளரிக்காய் வைத்து முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்?
முதலில் வெள்ளரி சாற்றுடன் காற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்க்கவும்.
இறுதியாக தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்
தேவையான பொருட்கள்
-
தேயிலை மர எண்ணெய் – 2 சொட்டு
-
வெள்ளரிக்காய் சாறு – 1 கப்
-
வெள்ளரி சாற்றுடன் தேயிலை மர எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- பின் அதை முகத்தில் தடவி மாஸ்க் போன்று பயன்படுத்தவும்.
டோனர்
வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக சுத்தம் செய்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் 5-7 நிமிடங்களுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து, டோனராக பயன்படுத்தலாம்.
சருமத்திற்கு வெள்ளரியின் நன்மைகள் என்ன?
-
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்
- தோல் அழற்சியைக் குறைக்கிறது
- சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும்
-
முகப்பருவை தடுக்கிறது
- தோல் பிரகாசத்தை ஊக்குவிக்கிறது
- முதுமையைத் தடுக்கிறது
குறிப்பு: வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை 2-3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |