குழந்தைகள் விரும்பி உண்ணும் வெள்ளரிக்காய் இட்லி.., எப்படி செய்வது?
வெள்ளரிக்காய் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் மிகக் குறைந்த கலோரி கொண்ட ஒரு புத்துணர்ச்சியூட்டும் காய்கறியாகும்.
இதில் வைட்டமின் C, வைட்டமின் K, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்தான வெள்ளரிக்காய் இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளரிக்காய்- 2
- தேங்காய்- 1 கப்
- பச்சை மிளகாய்- 1
- இஞ்சி- 1 துண்டு
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- உப்பு- 1 ஸ்பூன்
- தயிர் - 2 ஸ்பூன்
- ரவை- 1 கப்
எப்படி தயாரிப்பது?
முதலில் வெள்ளரிக்காயை நன்கு துருவி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் துருவிய வெள்ளரிக்காய், அரைத்த தேங்காய், நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, தயிர் மற்றும் ரவை சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடிவைக்கவும்.
இதற்கடுத்து ஒரு இட்லி பாத்திரத்தில் இந்த கலவையை வைத்து 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சத்தான வெள்ளரிக்காய் இட்லி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |