கோடை காலத்தில் உடற்சூடு: வெள்ளரிக்காய் பாயாசம் செய்து சாப்பிடுங்க
வெள்ளரிக்காயை கோடை காலத்தில் சூட்டைத் தணிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறிதான்.
இந்தக் காய்கறியைக் கொண்டு சாலட் செய்யலாம் என்றுதான் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் இந்த வெள்ளரிக்காயில் பாயாசமும் செய்யலாம். எப்படித் தெரியுமா? ரெசிபி இதோ,
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
பால் – 250 மில்லி
சர்க்கரை – தேவையானஅளவு
அரிசி மாவு – 3 தேக்கரண்டி
பாதாம் மிக்ஸ் – 1 மேசைக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் – 2
முந்திரி – தேவையான அளவு
செய்முறை
அரிசி மாவுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதனுடன் பாதாம் மிக்ஸை கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் மீதமிருக்கும் கொஞ்சமாக நெய் சேர்த்து வெள்ளரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும். நன்கு வெந்ததும் அரிசி மாவு கலவை சேர்த்து கிளறவும்.
பின்னர் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். பின்னர் அதனில் காய்ச்சிய பால், முந்திரி பருப்பை சேர்த்து ருசித்தால் வெள்ளரிக்காய் பாயாசம் தயார்.