சருமத்தில் அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமா? அப்போ வெள்ளரிக்காயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!
Beauty Tips
Pimple Problem
By Kishanthini
வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி இது சரும அழகிலும் பெரிதும் நன்மை புரிகின்றது.
அந்தவகையில் தற்போது வெள்ளரிக்காயை எப்படி எல்லாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
-
வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் ஆகியவை நீங்கும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படும். மேலும் சரும துளைகளில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.
-
வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம்.
-
வெள்ளரிக்காயின் தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
-
சருமத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சிறிதளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அதனுடன் தோல் சீவிய ஆப்பிள் மற்றும் வெள்ளரி கலந்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
-
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பிரகாசிக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US