இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து- சம்பவ இடத்தில் பலர் பலி

Tamil nadu Accident
By Fathima Jun 19, 2023 08:43 AM GMT
Report

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பக்கம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது, இன்று காலை கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும், பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதின.

இரண்டு பேருந்துகளும் அதிவிரைவாக வந்து கொண்டிருந்ததால் மோதிய வேகத்தில் உடைந்து போனது.

ஓட்டுநர்கள் உட்பட பேருந்தில் இருந்த 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்,  இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து- சம்பவ இடத்தில் பலர் பலி | Cuddalore Bus Accident In Tamilnadu

இதில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவர் அங்காளமணி (வயது 33), திருவெண்ணைநல்லூர் முருகன் (45), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனுவாசன் (55) என்பது தெரியவந்தது.

மேலும், ஒருவர் அடையாளம் தெரியவில்லை. இவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்த 80க்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர், அவர்களில் பலருக்கு காயம் தீவிரமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில், நிவாரணை உதவித்தொகையை அறிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து- சம்பவ இடத்தில் பலர் பலி | Cuddalore Bus Accident In Tamilnadu

முதலமைச்சர் நிவாரணைத்தொகை அறிவிப்பு

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்துக்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்.

மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து- சம்பவ இடத்தில் பலர் பலி | Cuddalore Bus Accident In Tamilnadu

இவ்விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும்,

படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US