Wechat மூலம் மலர்ந்த காதல்! சீன பெண்ணை கரம் பிடித்த தமிழக இளைஞர்
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், சமூக வலைதள செயலி மூலம் அறிமுகமான சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
wechat app மூலம் வளர்ந்த காதல்
கடலூர் மாவட்டத்தில் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்ற இளைஞர், வி சேட் செயலி மூலம் அறிமுகமான சீன பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் சீனா மற்றும் பாங்காக்கில் தொழில்முனைவராக இருந்து வருவதாக தெரிவித்த பாலச்சந்தர், வி சேட் செயலியில் யீஜியோ என்ற சீன பெண் தனக்கு அறிமுகமானதாகவும், இறுதியில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடலூரில் இந்து முறைப்படி அவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
சகோதரன் திருமணம்
இதற்கிடையில் பாலச்சந்தரின் திருமணம் நடந்த சிறிது நேரத்திலேயே அதே மேடையில், அவரது சகோதரரின் திருமணமும் சிறப்பாக நடைபெற்றது.
இதனால் மகிழ்ச்சியில் திளைத்த உறவினர்கள் மற்றும் மணமக்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர்.