சுவிட்சர்லாந்துடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம்: தாலிபான்களின் முதன்மை தலைவர்
சுவிட்சர்லாந்து உட்பட உலகின் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வளர்க்கவே விரும்புவதாக தாலிபான்களின் முதன்மை தலைவர்களில் ஒருவரான அப்துல் கஹார் பால்கி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை இரண்டாவது முறையாக தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அச்சத்தில் வெளியேறி வருகின்றனர்.
தங்கள் நாட்டு மக்களை மீட்பதுடன், அப்பாவி ஆப்கன் மக்களையும் சுவிஸ், கனடா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீட்டுள்ளன. இந்த நிலையில் தாலிபான்களின் முதமை தலைவர்களில் ஒருவரான அப்துல் கஹார் பால்கி முதன்முறையாக ஐரோப்பிய பத்திரிகை ஒன்றிற்கு எழுத்து மூலம் நேர்காணல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அதில், அமெரிக்க திரைப்படங்கள் இதுவரை காண்பித்துள்ளதை நம்பியே மக்கள் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இதனால் பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள் என அவர்கள் உங்களை நம்ப வைத்துள்ளனர் என்றார்.
தாலிபான்கள் ஒருபோது சொந்த நாட்டவர்களை மிரட்டியதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தங்கள் மீதான அச்சம் என்பது முற்றிலும் ஆதாரமற்றது என்றார். சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தாலிபான்களின் கடைமை என்றார் அவர்.
பத்திரிகைகளில் வெளிவந்த மரணதண்டனை விதிக்கப்பட்டது அல்லது சட்டத்திற்கு புறம்பான கொலைகள் என்பதெல்லாம் புரளி என குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாட்டவர்களுடன் பணியாற்றிய ஆப்கன் மக்களின் பட்டியல் தயாரித்துள்ளதாக கூறப்படுவதும் உண்மைக்கு புறம்பானது என்றார்.
பெண்கள் அச்சப்படுவது கூட ஆதாரமற்றது தான் என குறிப்பிட்டுள்ள அவர், இஸ்லாம் மதம் வகுத்தளித்துள்ள சட்டத்தின் படி பெண்களை பாதுகாக்கவே தாலிபான்கள் முயற்சிப்பதாக அப்துல் கஹார் பால்கி தெரிவித்துள்ளார்.
தாலிபான்களின் நோக்கம் தற்போது தங்கள் நாட்டில் செழிப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதாகும். இதற்கு ஷரீயா சட்டம் தேவைப்படுகிறது என்றார். ஷரியா சட்டம் தண்டிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது ஏற்க முடியாத ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர்,
சுவிட்சர்லாந்து உட்பட உலகின் அனைத்து நாடுகளுடனும் இணக்கமாக செல்லவும், நல்லுறவை வளர்க்கவும் தாலிபான்கள் விரும்புகிறது என்றார். காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஐ.எஸ் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர்,
தாக்குதல் நடந்த பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும், எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்றார்.
அமெரிக்கா பாதுகாப்பை உறுதி செய்ய தவறியது, நாங்கள் அல்ல, அந்த குண்டு வெடிப்புக்கு அமெரிக்கா தான் காரணம் என்றார்.