Belly fat குறையணுமா? அப்போ சீரகத்தை இப்படி சாப்பிடுங்கள்
தொப்பையை குறைக்க நம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
ஜிம் செல்கிறோம், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறோம். எனினும் சில இயற்கையான வழிகளிலும் தொப்பையை குறைக்கலாம்.
மருத்துவகுணங்கள் நிறைந்த சீரகம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.சீரகம் உண்பதன் மூலம் தொப்பை விரைவில் குறைந்துவிடும்.
credit by India.com
எடை இழப்பு தவிர்த்து சீரகத்தில் பிற நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
சீரகத்தின் நன்மைகள்
இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை குடித்து பின் சீரகத்தை மென்று உண்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
சீரகம் பசியைக் குறைத்து,வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது நீர் தேக்கத்தையும் குறைக்கிறது. இதனால் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைத்து தொப்பையை குறைக்க சீரகம் உதவுகின்றன.
வாயு, வீக்கம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், சீரகம் இதுபோன்ற பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்.
செரிமானத்தை குணப்படுத்தவும் இது மிகவும் நல்ல மருந்தாக விளங்குகின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு சீரகம் ஒரு நல்ல மருந்தாக உதவுகிறது. இது இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
credit by Adobe Stock
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை இது அதிகரிக்கிறது.
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை இருப்பவர்கள் சீரகத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தில் இதை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
முகப்பரு பிரச்சனை இருப்பவர்களுக்கும் சீரகம் மிகவும் நல்லது. இது ஆண்டிஃபங்கல் மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகத்தில் உள்ள பருக்களை அகற்ற உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |