சீரகம் ஆரோக்கியமானது தான்! ஆனால் அடிக்கடி நிறைய சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? சிறுநீரகம் பத்திரம்
சீரகம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இதனை அளவாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.
ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மிக அதிகமாக பயன்படுத்தினால் அதிக ஆரோக்கியம் கிடைக்காது. மாறாக எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும்.
சிலர் சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு மென்று கொண்டு இருப்பார்கள் இது முற்றிலும் தவறான ஒரு முறையாகும். இதில் உள்ள காரத்தன்மை மிகப்பெரிய தீங்கை விளைவிக்ககூடியதாகும்.
அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது.
அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் அடிக்கடி ஏப்பம் வரும். ரொம்ப நாளாக அதிகமாக சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். சீரகத்தில் இருக்கும் எண்ணெய் எளிதில் அதிக அளவில் ஆவியாவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
மாதவிடாய் காலங்களில் அதிகமாக சீரகம் எடுத்துக்கொண்டால் அது இரத்தப்போக்கை அதிகமாக ஏற்படுத்துகிறதாம். எனவே இது மாதிரியான சமயங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
சீரகம் சக்கரையின் அளவை இரத்ததில் குறைப்பதற்கு உதவுகிறது. எனவே சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவது நலம்.