டிராவிஸ் ஹெட் களமிறங்குவது உறுதி: பாக்சிங் டே டெஸ்ட் குறித்து பேசிய கேப்டன்
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட் விளையாட உடற்தகுதி பெற்றுவிட்டதாக அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் உறுதி செய்துள்ளார்.
பாக்சிங் டே டெஸ்ட்
மெல்போர்னில் நாளை இந்தியா-அவுஸ்திரேலியா மோதும் பாக்சிங் டே டெஸ்ட் தொடங்குகிறது.
இப்போட்டியில் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் (Travis Head) விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
இதனால் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டார். ஹெட் விளையாடாத பட்சத்தில் அவர் களமிறங்குவார் என்று கூறப்பட்டது.
காயம் பற்றி கவலை இல்லை
இந்த நிலையில் ஹெட் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார் என உறுதியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "டிராவ் நன்றாக இருக்கிறார், அவர் விளையாடுவார். இன்றும் நேற்றும் சில இறுதி விடயங்களை அவர் தேர்வு செய்தார். ஆனால் டிராவுடன் காயம் பற்றி கவலை இல்லை. அவர் முழு உடற்தகுதியுடன் ஆட்டத்திற்கு செல்வார்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |