புயல்வேகத்தால் வெஸ்ட் இண்டீசை மொத்தமாக சரித்த கம்மின்ஸ், ஹேசல்வுட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ஓட்டங்களுக்கு சுருண்டது.
கம்மின்ஸ், ஹேசல்வுட் தாக்குதல்
அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிராத்வெய்ட் (13), தகநரின் சந்தர்ப்பால் (6) சொற்ப இடங்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
AP Photo/James ElsbyNobody hits the top of off-stump quite like Pat Cummins!
— cricket.com.au (@cricketcomau) January 17, 2024
For the second summer in a row, he knocked back Kraigg Brathwaite's with absolute precision ? #AUSvWI pic.twitter.com/RVq9Jashg3
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் தாக்குதலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஷமர் ஜோசப்
எனினும் நிதானமாக ஆடிய கிர்க் மெக்கென்சி அரைசதம் (50) அடித்தார். கடைசி வீரராக அவுட் ஆன ஷமர் ஜோசப் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
லயன் ஓவரில் அவர் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவுஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட் தலா 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் லயன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |